சின்ன ஒபுளாபுரம் பகுதியில் மழைநீரில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி

1 month ago 5

கும்மிடிப்பூண்டி: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பரவலாக அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மழை அளவு 28 மி.மீ. ஆக கணக்கிடப்பட்டுள்ளது. ஓர் இரவு மட்டும் பெய்த மழைக்கே பல பகுதிகளில் மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கவரப்பேட்டை, வேர்க்காடு, கும்மிடிப்பூண்டி மற்றும் கும்மிடிப்பூண்டி ரயில்வே தரைப்பாலம், சிப்காட், பெத்திக்குப்பம் கூட்டுச்சாலை, சின்ன ஒபுளாபுரம், எளாவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கி கடல் போல் காட்சி அளித்து வருகிறது.

அதேபோல் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகே கழிவு நீருடன் மழை நீர் கலந்து தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியுள்ளதால் அருகாமையில் உள்ள குடியிருப்பு வாசிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் கும்மிடிப்பூண்டி முழுவதும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் அவல நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. கும்மிடிப்பூண்டி சிப்காட் சுற்றுலாப் பகுதிகளில் தொழிற்சாலைகள் பல இடங்களில் நீர்நிலையை ஆக்கிரமித்து உள்ளதால் கால்வாய்கள் அடைப்பு ஏற்பட்டு கிராமப்புறத்தில் தண்ணீர் சூழ்ந்து விடும் அபாயம் உள்ளது. இதனால், ஆங்காங்கே மழைநீர் நெடுஞ்சாலைத் துறை சாய்களில் நெடுஞ்சாலைகளில் முறையாக வடிகால் அமையாத காரணத்தினால் மழைநீர் நிற்கிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

The post சின்ன ஒபுளாபுரம் பகுதியில் மழைநீரில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article