சினிமாவை மிஞ்சிய தங்க நகை தொழில் பூங்கா அறிவிப்பு: ஆண்டுக்கு ரூ2 ஆயிரம் கோடி வர்த்தகம் அதிகரிக்க வாய்ப்பு: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

1 week ago 2


கோவை: கோவையில் ரூ126 கோடியில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்ததை தொடர்ந்து, கோவை உக்கடம், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதியில் தங்க நகை விற்பனையாளர்கள், தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுகுறித்து கோவை தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்து வெங்கட்ராமன் கூறுகையில், ‘எங்கள் கோரிக்கையை ஏற்று முதல்வர் தங்க நகை தொழிற் பூங்கா அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தோம். சிறை மைதானம் அருகே இதனை அமைத்தால் வசதியாக இருக்கும். ெகால்கத்தா அங்குர்ஹாட்டியில் மட்டுமே தங்க நகை தொழிற் பூங்கா உள்ளது.

தமிழ்நாட்டில் அமையும் பட்சத்தில் ஆரம்பத்திலேயே 2 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர். தங்க நகை ஏற்றுமதி உயரும். ஆண்டுக்கு தற்போது 100 டன் அதாவது ரூ80 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. பூங்கா அமைந்த உடனே ரூ2 ஆயிரம் கோடி வர்த்தகம் உயரும். இந்த தருணம் நகை தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் கொண்டாடும் தருணமாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார். தமிழ்நாடு தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாண்டியன் கூறுகையில், ‘‘கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் அறிவிப்பார் என சற்றும் எதிர்பார்க்கவில்லை.

சினிமாவில்தான் இதுபோல் நடக்கும். சினிமா முதலமைச்சர்தான் மக்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றுவார். இது நிஜத்தில் நடந்தது பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது. 24 மணி நேரத்தில் முதல்வர் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இனிமேல் இது போன்ற முதலமைச்சர் கிடைப்பாரா? என்பது தெரியவில்லை. இந்த அறிவிப்பால் தொழிலாளர்களின் வாழ்க்கை தங்க நகையைபோல ஜொலிக்கும்’’ என்றார்.

The post சினிமாவை மிஞ்சிய தங்க நகை தொழில் பூங்கா அறிவிப்பு: ஆண்டுக்கு ரூ2 ஆயிரம் கோடி வர்த்தகம் அதிகரிக்க வாய்ப்பு: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article