
திருச்சி,
திருச்சியில் 31-ஆம் தேதி மதச்சார்பின்மை காப்போம் மாபெரும் எழுச்சி பேரணி விசிக சார்பில் நடைபெறுகிறது. இதற்கான மண்டல வாரியான ஆய்வு கூட்டம் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. அப்போது மேடையில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது;
"விசிகவால் நடத்தப்படும் மாநாட்டின் பெயர்களுக்கு பொருள் உள்ளது. விசிகவினால் நடத்தப்பட்ட அனைத்து மாநாட்டிலும் பல்வேறு கருத்துக்கள் உள்ளது. எந்த அரசியல் கட்சிகளும் தங்களை போன்று மாநாடு நடத்தியதில்லை. எல்லா தொகுதிகளிலும் இந்துக்களின் வாக்குகளை விட முஸ்ஸீம்களின் வாக்குகள் குறைவு, வாக்கு வங்கிக்காகவும்,தேர்தல் அரசியலுக்காகவும் வக்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற கூறவில்லை.
விசிகவிற்கு தேர்தல் களத்தினையும் தாண்டி ஒரு கோட்பாடு உள்ளது, அரசியலமைப்பு சட்டத்தினை பாதுகாக்க வேண்டும், சாதி அரசியலை மிரட்டி வைத்து கொண்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குமேல் அரசியல் செய்ய முடியாது. சினிமா ஸ்டார் வந்தால் கூட விசிகவிற்கு போட்டியாக வர முடியாது, விசிகவின் களமே வேறு. வேங்கைவயல் குறித்து ஏன் பெரிய அளவில் திருமாவளவன் பேசவில்லை, போராட்டம் செய்யவில்லை என சிலர் தெரிவிக்கிறார்கள். அதிமுக கூட வேங்கைவயல் குறித்து பெரிய அளவில் போராட்டம் செய்யவில்லை. பாஜகவோடும், பாமகவோடும் எப்போதும் உறவு இல்லை, வன்னிய சமூகத்தினரோடு எங்களுக்கு உறவு உண்டு"
என்றார்.