பிரியா பிரகாஷ் வாரியர் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்

5 hours ago 3

நன்றி குங்குமம் டாக்டர்

சமீபத்தில் வெளியான அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் சிம்ரனின் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு நடனமாடி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் ஈர்த்துள்ளார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். கேரளாவில் பிறந்தவரான பிரியா பிரகாஷ் வாரியர் 2019ல் ஒரு அடார் லவ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு அவருக்கு தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகுகளில் வாய்ப்பு கிடைத்தன.

தமிழில் தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு, தற்போது அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் தமிழில் நடித்திருக்கிறார். இதையடுத்து பாலிவுட்டில் ஸ்ரீதேவி பங்களா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஒர்க்கவுட்ஸ்: ஒர்க்கவுட்ஸ் என்று எடுத்துக் கொண்டால், எனக்கு தினசரி ஜிம்முக்கு போகும் பழக்கம் இல்லை. இயற்கையாக எனது உடல் அமைப்பு ஃபிட்டாகவே அமைந்துள்ளது. அதற்கு, எனது ஜெனடிக்கும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். மற்றபடி, அடிப்படையில் நான் ஒரு நடன கலைஞர்.

அதனால், சிறு வயது முதலே நடன பயிற்சிகள் செய்து வருவதால், எனக்கு பெரிதாக ஓர்க்கவுட்ஸ் எதுவும் தேவைப்படுவதில்லை. மோகினியாட்டம் முறைப்படி பயின்றிருக்கிறேன். காலை எழுந்ததும், முதலில் யோகாவுடன் எனது நாளை தொடங்குவேன். பின்னர், நடைப்பயிற்சி அரைமணி நேரம் செய்வேன். அதன்பின்னர், கால்களுக்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு மணி நேரம் டான்ஸ் பயிற்சிகள் செய்வேன். இவைதான் எனது ஒர்க்கவுட் ரகசியங்கள்.

டயட்: நான் ஒரு ஃபுட்டி. அதனால் பெரிதாக டயட் எல்லாம் ஃபலோ செய்வது கிடையாது. பிடித்த உணவை சாப்பிடும் பழக்கம் உடையவள். ஆனால், முடிந்தளவு ஜங்க் உணவுகளை தவிர்த்துவிடுவேன் அவ்வளவுதான். ஜங்க் உணவுகளை தவிர்த்தாலே டயட்டில் பெரிய பிரச்னை இருக்காது என்று நம்புகிறேன். காலையில் தினசரி இளநீர் குடிக்கும் வழக்கம் எனக்கு உண்டு. அதில், விட்டமின்களும், மினரல்களும் நிறைந்திருக்கிறது.

மேலும், இளநீர் உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. பொதுவாகவே, எனது உணவில் தேங்காயின் பயன்பாடு அதிகம் இருக்கும். அதுவும் எனது ஃபிட்னெஸ்க்கு உதவும் ஒன்றுதான். மற்றபடி சாண்ட்விச், பச்சை காய்கறிகள், பழச்சாறுகள், சாலட், தயிர் போன்றவையும் எனது உணவில் நிச்சயம் இருக்கும். இரவில் பழங்கள், சப்பாத்தி, பால் எடுத்துக் கொள்வேன். இவ்வளவுதான் என்னுடைய தினசரி உணவுமுறைகளாகும் மேலும், ஆரோக்கியமான சருமத்திற்காக நிறைய தண்ணீர் அருந்துவேன். பொதுவாக, அம்மா சமைக்கும் எங்களது பாரம்பர்ய உணவுகள் அனைத்தும் விரும்பி சாப்பிடுவேன்.

பியூட்டி: இயற்கையாகவே எனது தோல் பளபளப்பானதாக அமைந்துவிட்டது. அதனால் தோல் பராமரிப்புக்காக பெரிய மெனக்கெடல்கள் எதுவும் செய்வதில்லை. இதற்கு காரணம் எங்களது வீட்டில் சமைக்கப்படும் உணவு முறையாகக் கூட இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் பொதுவாகவே, கேரள உணவுகளில் அதிகளவில் தேங்காய் சேர்க்கப்படுவதும் காரணமாக இருக்கலாம்.

எனது கூந்தல் மற்றும் தோல் பராமரிப்புக்கும் தேங்காய் எண்ணெயையே அதிகம் பயன்படுத்துகிறேன். தினமும் குளிக்கச் செல்வதற்கு முன்பு தேங்காய் எண்ணெயை தலை மற்றும் உடல் முழுவதும் தேய்த்து 10 நிமிடம் வைத்திருந்து பின்னரே குளித்துவிட்டு வருவேன். கூந்தலை பொருத்தவரை, என் அம்மாவிடம் இருந்து அழகான அடர்ந்த சுருட்டையான கூந்தல் எனக்கும் வந்திருப்பதாக நினைக்கிறேன். இதுவும் கேரள பெண்களுக்கே உரித்தானது தானே.

அதுபோன்று தினசரி எட்டு மணி நேர தூக்கத்தை ஒருபோதும் விட்டுக் கொடுப்பதில்லை. தூக்கம் நன்றாக இருந்தாலே, நமது சருமத்தில் ஏற்படும் பிரச்னைகளை சருமம் தன்னாலேயே சரி செய்து கொள்ளும். அதுபோன்று, தினசரி, மஞ்சள், தேன், தயிர் கலந்த பேஸ் பேக்கை முகத்தில் தடவிக் கொள்வேன். இது இயற்கை மாய்சுரைஸராக வேலை செய்து என் முகத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. இது தவிர, சன்ஸ்கிரீன் தினசரி பயன்படுத்துகிறேன்.

அதுபோன்று எனது மேக்கப் ரகசியம் என்பது எதுவும் தனியாக கிடையாது. நான் எப்போதும் லைட் மேக்கப்பையே விரும்புகிறேன். அதுதான் எனக்கும் பொருத்தமானதாக இருக்கும். எனவே, லிப் பாம், கன்னச் சாயம், கான்சீலர் காஜல், மற்றும் கொலோன் இவைகள்தான் பெரும்பாலும் எனது மேக்கப் கிட்.டில் இருக்கும். இவ்வளவுதான் எனது பியூட்டி ரகசியம்.

தொகுப்பு: தவநிதி

The post பிரியா பிரகாஷ் வாரியர் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ் appeared first on Dinakaran.

Read Entire Article