மதுரை: சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள நான்கு சித்தரை வீதிகளில் சேரும் குப்பைகளை எளிதில் அகற்றிட மாநகராட்சி ஆணையர் முயற்சியால் வைக்கப்பட்டுள்ள ‘பசுமை மாறா மூங்கில் குப்பைக்கூடைகள்’, பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா வரும் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அழகர் கோயில் சித்திரைத் திருவிழாவும், இக்கோயில் விழாவுடன் இணைந்து நடத்தப்படுகிறது. இந்த திருவிழா நாட்களில் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேர்த்திருவிழா மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது. சாதாரண நாட்களில் ஒரு நாளைக்கு மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி, தினமும் 20 டன் குப்பைகள் சேரும்.