சித்திரை தேய்பிறை பஞ்சமி... வாராகியை வழிபட வாக்கு சித்தி கிடைக்கும்

1 day ago 4

சப்த மாதாக்களில் முக்கியமான தேவியான வாராகி அன்னையை வழிபடுவதற்கு உகந்த நாள் பஞ்சமி திதி. இந்த நாளில் வாராகியை வழிபட்டால், சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அவ்வகையில் சித்திரை மாத தேய்பிறை பஞ்சமி நாளான இன்று வாராகி அன்னையை வழிபடலாம். இன்று (17-4-2025) மதியம் 1.24 மணிக்கு பஞ்சமி திதி தொடங்கியது. நாளை (18-4-2025) வெள்ளிக்கிழமை மதியம் 2:26 மணி வரை பஞ்சமி திதி இருக்கிறது.

குறிப்பாக, வாராகி வழிபாட்டுக்கு இரவு நேரம்தான் சிறப்பானது. எனவே இன்று இரவு வீட்டில் வாராகி வழிபாட்டை மேற்கொள்ளலாம். இன்று வழிபாட்டை மேற்கொள்ள முடியாதவர்கள் நாளை அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்திலும் இந்த வழிபாட்டை வீட்டில் செய்யலாம். அருகில் உள்ள கோவில்களில் நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்று அருள் பெறலாம்.

வீட்டில் வாராகி யந்திரம் வைத்திருப்பவர்கள், விக்கிரகம் வைத்திருப்பவர்கள், பால், தேன், இளநீர், பஞ்சாமிர்தங்களால் தேவிக்கு அபிஷேகம் செய்து, அர்ச்சிப்பது நன்மையளிக்கும். வாராகியை வழிபடுபவர்களுக்கு, மந்திர சித்தி, வாக்கு சித்தி கிடைக்கும். இந்த தேவியை பூஜிப்பவர்களுக்கு, செய்வினை அண்டாது என்பது நம்பிக்கை. நடக்காமல் தள்ளிப்போகும் நல்ல காரியங்கள் விரைவில் நடக்கும்.

வாராகியை வாசனைப் பூக்களால், குறிப்பாக சிவப்பு நிற பூக்களைக் கொண்டு பூஜிப்பது விசேஷம். கருப்பு உளுந்தில் செய்த வடையும், மிளகு சேர்த்த தயிர் சாதமும். சர்க்கரை வள்ளி கிழங்கும், சுக்கு சேர்த்த பானகமும், இந்த தேவிக்கு சிறப்புக்குரிய நைவேத்தியங்கள்.

Read Entire Article