சிதம்பரம், பூதலூரில் நின்று செல்லும் 2 ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

3 hours ago 1

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

தாம்பரம் - செங்கோட்டை இடையே இயக்கப்பட்டு வரும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்கள் 20683, 20684) பரிசார்த்த முறையில் கூடுதலாக சிதம்பரம் ரெயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் இன்று முதல் நின்று செல்ல ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

இதேபோல், திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் கூடுதலாக பூதலூர் ரெயில் நிலையத்தில் இன்று முதல் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Read Entire Article