சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சாமி தரிசனம்

4 months ago 24

கடலூர்,

சிதம்பரம் நடராஜர் கோவிலில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வந்த அவருக்கு கோவில் பொது தீட்சிதர்கள கும்ப மரியாதை செய்து வரவேற்பு அளித்தனர்.

பின்னர் கனக சபையில் ஏறி, சிவகாமசுந்தரி சமேத நடராஜர் மூர்த்தியை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தரிசனம் செய்தார். நடராஜர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்பு, தில்லை காளியம்மன் கோவிலில் நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தரிசனம் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து வழிபட்டார். 

Read Entire Article