சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் அரசு எப்படி தலையிட முடியும்? - உயர் நீதிமன்றம் கேள்வி

4 months ago 15

சென்னை: “சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகிக்கும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் பொது தீட்சிதர்களுக்கு வழங்கியுள்ள நிலையில், அதில் அரசின் அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும்?” என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொது தீட்சிதர்கள் குழுவின் கட்டுப்பாட்டை மீறி கனகசபையில் பக்தர்கள் நின்று தரிசிக்க உதவியதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் நடராஜ தீட்சிதர் என்பவரை இடைநீக்கம் செய்து பொது தீட்சிதர்கள் குழு உத்தரவிட்டது. இந்த உத்தரவை இந்து சமய அறநிலையத் துறை ரத்து செய்தது. இதை எதிர்த்து பொது தீட்சிதர் குழுவும், அறநிலையத் துறை உத்தரவை அமல்படுத்தக் கோரி நடராஜ தீட்சிதரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.

Read Entire Article