விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா நேற்று அளித்த பேட்டி: சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து தவறான தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. ஒரு காவல்துறை அதிகாரியும், இந்து அறநிலையத்துறையை சேர்ந்த 9 அதிகாரிகளும் சேர்ந்து சிதம்பரம் நடராஜர் கோயிலை பற்றி தினமும் ஏதோ ஒரு தகவலை பரப்பி வருகின்றனர். 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பொது தீட்சிதர்கள் விற்றுவிட்டார்கள் என்று கூறப்படுகிறது.
2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை யாராவது விற்கமுடியுமா?. ஏனென்றால் 1976ல் கொண்டு வரப்பட்ட அரசாணையின்படி சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு கட்டளையாளர்கள் கொடுத்த நிலங்கள். அது தீட்சிதர்களுக்கான நிலங்கள் அல்ல. கோயிலுக்கு கொடுத்த இடம். இவர்கள் கூறியவாறு 3 ஆயிரம் ஏக்கர் இல்லை. 3,347 ஏக்கர் நிலம் இருக்கு. அது அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தனி தாசில்தாரிடம் இருக்கிறது. இதனை எப்படி பொதுதீட்சிதர்கள் விற்பனை செய்யமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.
The post சிதம்பரம் நடராஜர் கோயிலின் 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றார்களா?: எச்.ராஜா புது தகவல் appeared first on Dinakaran.