கடலூர்: சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 44-வது ஆண்டு நாட்டியாஞ்சலி வருகிற 26-ம் தேதி தொடங்கி மார்ச் 2-ம் தேதி வரை 5 நாள்கள் தெற்கு ரத வீதி ராஜாசர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் நடைபெறுகிறது என அறக்கட்டளை செயலாளர் வழக்கறிஞர் ஏ.சம்பந்தம் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 1981-ல் நாட்டியாஞ்சலி விழா தொடங்கப்பட்டு 2014 வரை 33 ஆண்டுகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் நடராஜர் கோயிலை பொதுதீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து 2015-ம் ஆண்டு பொதுதீட்சிதர்களே நாட்டியாஞ்சலியை நடத்துவதாக அறிவித்து கோயிலில் தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பில் நாட்டியாஞ்சலியை நடத்தினர். இதனால் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் தெற்கு ரத வீதி ராஜாசர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் நாட்டியாஞ்சலி விழா நடத்தி வந்தனர்.