சிட்ரான் நிறுவனம் சி3 டார்க் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 3 வேரியண்ட்கள் உள்ளன. ஷைன் டார்க் எடிஷன் 82 எச்பி பவரையும், 115 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்சுடன் கூடிய 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் அல்லது 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட 110 எச்பி பவரையும் 205 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் என இரண்டு வகையாக கிடைக்கும். 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தலாம். டார்க் எடிஷன் என்ற பெயருக்கு ஏற்ப முழுக்க முழுக்க கருப்பு வண்ண தீமில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.
சீட், டேஷ் போர்டு, ஸ்டீரியரிங் வீல், கன்சோல் என அனைத்தும் கருப்பு நிறத்தில் உள்ளன. இது தவிர ஸ்டாண்டர்டு அம்சமாக கீலெஸ் என்ட்ரி, பவர் விண்டோ, முன்புறம் இரண்டு ஏர் பேக்குகள், ஸ்பேர் வீல் ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலையாக ஷைன் டார்க் எடிஷன் சுமார் ரூ.8.38 லட்சம், ஷைன் டர்போ டார்க் எடிஷன் சுமார் ரூ.9.58 லட்சம், ஹைன் டர்போ ஏடி டார்க் எடிஷன் சுமார் ரூ.10.19 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
The post சிட்ரான் சி3 டார்க் எடிஷன் appeared first on Dinakaran.