சிங்கள் புவா (உத்தரகாண்ட்)

3 months ago 17

தேவையானவை:

ரவை – 1 கப்,
சர்க்கரை – ¾ கப்,
யோகர்ட் – ½ கப்,
சோம்பு – ½ டீஸ்பூன்,
வாழைப்பழம் (நன்கு பழுத்தது) -1,
ஏலக்காய் தூள் – ½ டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் (எண்ணெய் தவிர) ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்து பிசைந்து கொள்ளவும்.
அப்படியே 1 மணி நேரம் ஊறவிடவும். அடுப்பில் வாணலி வைத்து, எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாக வெந்ததும் எண்ணெய் வடித்து எடுக்க ‘சிங்கள் புவா’ தயார்.

The post சிங்கள் புவா (உத்தரகாண்ட்) appeared first on Dinakaran.

Read Entire Article