சிங்கம்புலி நடித்துள்ள 'செருப்புகள் ஜாக்கிரதை' ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

3 hours ago 2

இயக்குனர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'செருப்புகள் ஜாக்கிரதை'. இந்த தொடரை எஸ்.எஸ் குரூப் சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரித்துள்ளார். இந்த வெப் தொடரில் முதன்மைப் பாத்திரத்தில் நடிகர் சிங்கம்புலி நடித்திருக்கிறார். இவருடன் விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், மனோகர், இந்திரஜித், மாப்ள கணேஷ், உசேன், சபிதா ,உடுமலை ரவி, பழனி, சாவல் ராம், பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்

இந்த தொடர் வைரம் உள்ள செருப்பைத் தேடி அலையும், கலகலப்பான பயணம். இதில் வரும் ஒவ்வொரு எபிஸோடும் கலகலப்பான காமெடியுடன், பரபரப்பான திருப்பங்களுடன் வெகு சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த தொடர் வருகிற மார்ச் 28-ம் தேதி ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Get ready for a hilarious game of Hide & Seek! #SeruppugalJaakirathai – A ZEE5 Original is coming your way to entertain you! Premieres from March 28th!#SingamPuli @Vivek_Rajgopal #IraaAgarwal #Manohar @SRajeshdirector#SeruppugalJaakirathai #AZee5Original #ZEE5pic.twitter.com/lpUgZQg5F6

— ZEE5 Tamil (@ZEE5Tamil) March 13, 2025
Read Entire Article