சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பழுது: 276 பேர் தப்பினர்

2 hours ago 2

மீனம்பாக்கம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சிங்கப்பூரில் இருந்து இரவு 10 மணிக்கு சென்னைக்கு வந்துவிட்டு இரவு 11.25 மணிக்கு மீண்டும் சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு செல்கிறது. இந்த விமானம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இணைப்பு விமானமாகவும் இருப்பதால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். நேற்றிரவு இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக 264 பயணிகள் சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் இரவு 10 மணிக்கு வரவேண்டிய விமானம் தாமதமாக இரவு 10.26 மணிக்கு வந்தது.

இதையடுத்து பயணிகள் அனைவரும் ஏற்றப்பட்டு விமானம் ஓடுபாதையில் ஓடுவதற்கு தயாரானது. முன்னதாக விமானத்தில் இயந்திரங்களை சரிபார்த்தபோது இயந்திர கோளாறு இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து பொறியாளர்கள் குழுவினர் வந்து சரிப்படுத்தி சுமார் 5 மணி நேரம் தாமதமாக இன்று அதிகாலை 4.15 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் 264 பயணிகள், 12 விமான ஊழியர்கள் உட்பட 276 பேர் தப்பினர்.

The post சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பழுது: 276 பேர் தப்பினர் appeared first on Dinakaran.

Read Entire Article