சிங்கப்பூரில் நல்ல கம்பெணியில் அதிக சம்பளத்தில் வேலை ஆசை வார்த்ைத கூறி விவசாயிடம் ரூ.1.36 லட்சம் மோசடி

1 day ago 2

அரியலூர், ஜன. 30: அரியலூர் மாவட்டம் வி.கைக்காட்டி பகுதியைச் சேர்ந்தவர் சாமிகண்ணு மகன் சரவணன் (36); விவசாயி. இந்நிலையில், கடந்த 2024 ஜூலை மாதம் சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் 10 பேருடன் வெளிநாடு செல்வதற்காக தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வெற்றி மணி மகன் பிரசாந்த்(33) என்பவரை அணுகியுள்ளனர். அப்போது, பிரசாந்த் சரவணன் மற்றும் அவரது நண்பர்களிடம் சிங்கப்பூர் கம்பெணியில் அதிக சம்பளத்தில் நல்ல வேலை உள்ளது. எனவே, உடனடியாக பணம் அளித்தால் விசா வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.

இதனை நம்பி, சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் பிரசாந்த்தின் இரண்டு வங்கி கணக்குகளில் ரூ.29,12,500 தொகையை செலுத்தியுள்ளனர். மேலும், மெடிக்கல் போர்டு அட்டென்ட் செய்வதற்கு ரூ.1,07,000 தொகையை பிரசாந்திடம் நேரில் கொடுத்துள்ளனர். அதன் பிறகு, பிரசாந்த், சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் அனைவருக்கும் போலி விசாக்களை வழங்கி உள்ளார். சரவணன்-க்கு இது போலி விசா என்று தெரியவந்தது. இதனை அடுத்து சரவணன் கடந்த 27ம் தேதி அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் அமரஜோதி வழக்கு பதிவு செய்தார். அரியலூர் நகர காவல் ஆய்வாளர் சந்திரமோகன் (பொறுப்பு மாவட்ட குற்றப்பிரிவு ), தலைமையிலான காவல்துறையினர் பிரசாந்தை நேற்று விசாரணை செய்ததில், அவர் அளித்தது போலி விசா என்றும், பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்தது உறுதியானது. அதையடுத்து காவல்துறையினர் பிரசாந்தை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

The post சிங்கப்பூரில் நல்ல கம்பெணியில் அதிக சம்பளத்தில் வேலை ஆசை வார்த்ைத கூறி விவசாயிடம் ரூ.1.36 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Read Entire Article