சிகிச்சைக்காக சென்னை வந்தபோது மரணம் பாகிஸ்தான் வாலிபரின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு

2 weeks ago 4

சென்னை: காஷ்மீர் பகுதியில், கடந்த வாரம் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானியர்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்தி அவர்களை வெளியேற்றும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்கள் குறித்த கணக்கெடுப்பிலும் குடியுரிமை அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தானை சேர்ந்த சையது ஜான் (24) என்பவர், நுரையீரல் சம்பந்தமான பிரச்னைக்கு சிகிச்சை பெற, கடந்த 2 மாதங்களுக்கு முன், மருத்துவ விசாவில், சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்ததும், அவருக்கு துணையாக 2 பேர் வந்துள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் உதவியுடன் குடியுரிமை அதிகாரிகள் அவரை பாகிஸ்தானுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் திடீரென சையது ஜான் உயிரிழந்தார். இதையடுத்து அவருடன் வந்த 2 பாகிஸ்தானியர்கள், நேற்று முன்தினம் அதிகாலை சென்னையில் இருந்து எத்தியாட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் அபுதாபி வழியாக, பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு திரும்பி சென்றனர். உயிரிழந்த சையது ஜானின் உடல் பதப்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம், இலங்கை வழியாக பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

The post சிகிச்சைக்காக சென்னை வந்தபோது மரணம் பாகிஸ்தான் வாலிபரின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article