சிகிச்சை நிறைவு: டாக்டர்களுக்கு நன்றி கூறிய ரஜினிகாந்த்

3 months ago 28

சென்னை,

நடிகர் ரஜினிகாந்திற்கு நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அப்போலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். செரிமானம் பிரச்சினை, சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் மருத்துவமனையில் இருந்த டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் ரஜினிகாந்திற்கு ரத்த நாளத்தில் அடைப்பு கண்டறியப்பட்ட நிலையில், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்ட நிலையில் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பின்னர் மருத்துவ கண்காணிப்பிற்கு பின் இன்று மாலை ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்படுகிறது. டாக்டர்கள் சாய் சதீஷ், விஜய் சந்திரன் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய குழுவினர் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெறும் நடிகர் ரஜினிகாந்த், கண்விழித்த பின்னர் தனக்கு சிகிச்சையளித்த டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தாகவும் கண்விழித்து பேசுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read Entire Article