சிஎஸ்கேவுக்கு 21 விக்கெட் நுார் அகமது சாதனை

1 day ago 4

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 62வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) தோல்வியை தழுவியது. இருப்பினும், அந்த போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்திய சென்னை அணி பந்து வீச்சாளர் நுார் அகமது, அந்த அணிக்காக 2வது அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். நடப்பு தொடரில் சென்னை அணிக்காக 21 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள நுார் அகமது, இந்த சாதனைப் பட்டியலில், சென்னை அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் தலா 20 விக்கெட் சாதனையை முறியடித்துள்ளார். இந்த சாதனைப் பட்டியலில், 2019ம் ஆண்டு சென்னை அணிக்காக 26 விக்கெட்டுகள் வீழ்த்திய இம்ரான் தாஹிர் முதலிடத்தில் உள்ளார்.

64வது லீக் போட்டியில் இன்று: கஜ பலத்துடன் குஜராத் கலகலப்பு இழந்த லக்னோ
* ஐபிஎல் தொடரில் இன்று இரவு அகமதாபாத்தில் நடைபெறும் 64வது லீக் ஆட்டத்தில் குஜராத், லக்னோ அணிகள் மோதுகின்றன.
* பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதிப் பெற்றுவிட்ட குஜராத் இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 9-3 என்ற கணக்கில் வெற்றி தோல்விகளை பெற்று, 18 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
* லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, இதுவரை 12 ஆட்டங்களில் ஆடி 5-7 என்ற கணக்கில் வெற்றி, தோல்விகளை வசப்படுத்தி உள்ளது. 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளதுடன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டது.
* ஒரே ஆண்டில் ஐபிஎல் தொடரில் அறிமுகமான இந்த 2 அணிகளும் இதுவரை 6 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
* அவற்றில் குஜராத் 4-2 என்ற கணக்கில் வெற்றி, தோல்விகளை பெற்றுள்ளது.
* இந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக குஜராத் 227, லக்னோ 186 ரன்களை குவித்துள்ளன.
* குறைந்தபட்சமாக குஜராத் 130, லக்னோ 82 ரன்களில் ஆட்டத்தை முடித்துள்ளன.
* நடப்புத் தொடரில் ஏப்.12ம் தேதி நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் லக்னோ, 6விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியுள்ளது.
* இந்த 2 அணிகளும் இன்னும் தலா 2 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டி உள்ளது.
* இந்த 2 ஆட்டங்களிலும் வெற்றிப் பெற்றால் சுப்மன் கில் தலைமையிலான குஜராத், லீக் சுற்று முடிவில் முதல் இடத்தை தக்க வைக்கும். அதன் மூலம் நேரடியாக குவாலிபயர் சுற்றில் விளையாட முடியும் என்பதால் குஜராத் இன்றைய ஆட்டத்தில் கூடுதல் வேகம் காட்டும்.
* அதே நேரத்தில் பிளே ஆப் வாய்ப்பை இழந்து விட்ட ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ, எஞ்சிய 2 ஆட்டங்களில் வெல்வதன் மூலம் கவுரவமாக விடை பெற முடியும்.

The post சிஎஸ்கேவுக்கு 21 விக்கெட் நுார் அகமது சாதனை appeared first on Dinakaran.

Read Entire Article