
புதுடெல்லி,
சி.ஐ.எஸ்.சி.இ. பாடத்திட்டத்துக்கான 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் 2 மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்டன. அதன் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
வழக்கம்போல், மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர். 10-ம் வகுப்பு தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 98.64 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 99.45 சதவீதமாகவும் உள்ளது.
12-ம் வகுப்பு தேர்வில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 98.64 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 99.45 சதவீதமாகவும் உள்ளது.