சி.எஸ்.கே-வுக்கு எதிராக... ரோகித், தவானை முந்தி மாபெரும் சாதனை படைத்த விராட் கோலி

5 hours ago 4

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 213 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் விராட் 62 ரன், பெத்தேல் 55 ரன், ஷெப்பர்ட் 53 ரன் எடுத்தனர்.

சென்னை தரப்பில் பதிரனா 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 214 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 211 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 2 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு திரில் வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக மாத்ரே 94 ரன்கள் எடுத்தார். பெங்களூரு தரப்பில் என்கிடி 3 விக்கெட் வீழ்த்தினார்.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்து அசத்தியதன் மூலம் சி.எஸ்.கே.வுக்கு எதிராக விராட் கோலி மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே.வுக்கு எதிராக அதிக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், டேவிட் வார்னர் (தலா 9 முறை) ஆகியோரை பின்னுக்கு தள்ளி விராட் கோலி (10 முறை) முதல் இடம் பிடித்துள்ளார்.

ஐ.பி.எல்-லில் சிஎஸ்கேவுக்கு எதிராக அதிக 50+ ஸ்கோர்கள்:-

விராட் கோலி - 10

ஷிகர் தவான் - 9

டேவிட் வார்னர் - 9

ரோகித் சர்மா - 9

Read Entire Article