பந்தலூர்,அக்.5: பந்தலூர் அருகே அரசு தேயிலை தோட்டம் டேன்டீ சரகம் 1 பகுதியில் ஏராளமான தேயிலை தோட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் இலங்கை மறுவாழ்வு திட்டத்தின் கீழ் குடியமர்த்தப்பட்ட தாயகம் திரும்பிய தமிழ் மக்கள் கடந்த 40 ஆண்டுக்கு மேலாக வசித்து வருகின்றனர். டேன் டீ நிறுவனம் உறுவாக்கப்பட்ட காலத்தில் அந்த பகுதியில் போடப்பட்ட தார்சாலைகள் தற்போது பழுதடைந்து குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. மேலும் கடந்த ஆண்டு பெய்த கனமழைக்கு நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் சேதமானது பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக சேரங்கோடு ஊராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் இது நாள் வரை சாலை சீரமைக்காமல் உள்ளது. மேலும் தற்போது மேடான பகுதியில் இருந்து உருண்டு வந்த பாறைக்கல் சாலையின் குறுக்கே கிடப்பதால் ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வரமுடியாமல் உள்ளதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும். மேலும் அந்த பகுதியில் நடைபாதை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சாலையில் விழுந்த பாறையை அகற்றாததால் மக்கள் பாதிப்பு appeared first on Dinakaran.