சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது கும்பகோணம் எம்எல்ஏ க.அன்பழகன் (திமுக) பேசுகையில், ‘‘தமிழ்நாடு முழுவதும் இருக்கிற மிகப்பெரிய பிரச்னை மாடு, நாய்கள் தொல்லை. மாடுகள் குறுக்கே வந்து 2 சக்கர வாகனங்களில் சென்று பலர் காயம் அடைகிறார்கள். சிலர் மரணம் கூட அடைகிறார்கள். இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?’’ என்றார்.
இதற்கு பதில் அளித்து நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ‘‘ பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டத்தின்கீழ், முற்றிலுமாக ஒழிப்பதற்கு வழியில்லை. மாடுகளைப் பொறுத்தளவில் பட்டியிலே அடைத்து அதற்கு அபராதம் விதிக்கிறபோது பொதுமக்கள் வந்து எங்கள் மாட்டை ஏன் நீங்கள் பிடித்தீர்கள் என்று மிகவும் கோபப்படுகிறார்கள்.
சென்னையிலே 10, 15 முறை பிடித்துவிட்டோம். ஆனால், மறுபடியும் திரும்பவும் மாடுகளை அவிழ்த்து விட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாய்கள் தொந்தரவு என்பது எல்லா இடங்களிலும் மிக, அதிகமாக இருக்கிறது. இருப்பினும் உறுப்பினர் கூறிய கருத்து அனைத்து ஆணையர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாடுகளை பிடித்து அடைத்தால் நீங்கள் (எம்.எல்.ஏ.க்கள்) திறந்து விட எதுவும் கூற கூடாது, பார்த்துக்கொள்ளுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
The post சாலையில் மாடுகள் சுற்றித்திரிவது தடுக்கப்படும் தமிழகத்தில் நாய் தொந்தரவை கட்டுப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.