சாலையில் சுற்றி திரிந்த காட்டு மாடு

3 months ago 21

ஏற்காடு, அக்.7: ஏற்காடு வனப்பகுதியில் அதிகளவில் காட்டு மாடுகள் உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக காட்டு மாடுகள் கூட்டம் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாக உள்ளது. நேற்று அதிகாலை 4.30 மணியளவில் பரபரப்பாக காணப்படும், ஏற்காடு பஸ் நிலையம் செல்லும் சாலையில், காட்டு மாடு ஒன்று பொதுமக்கள் வாகனங்களை வழி மறித்தபடி நின்றது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து வாகனங்களை நிறுத்தி விட்டனர். சுமார் 30 நிமிடம் காட்டு மாடு சாலையில் நின்றது. பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்கு சென்றதால், மீண்டும் வாகனங்களை இயக்கினர்.

The post சாலையில் சுற்றி திரிந்த காட்டு மாடு appeared first on Dinakaran.

Read Entire Article