சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளை காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்த சிறுமி

1 month ago 4

அம்பத்தூர்: அம்பத்தூர் பிரித்திவிபாக்கம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஸ்ரவந்தி (10) வெங்கடபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, தந்தை விக்னேஷுடன், பைக்கில், பரதநாட்டியம் வகுப்புக்கு வெங்கடபுரம், வடக்கு பூங்கா சாலை வழியாக சிறுமி சென்று கொண்டிருந்தாள். அப்போது சாலையில் நான்கு ரூ.50 நோட்டு, ஒரு ரூ.20 நோட்டு என ரூ.220 பணம் சிதறி கிடந்துள்ளது. சிறுமி ஸ்ரவந்தி அந்த ரூபாய் நோட்டுகளை எடுத்து தனது தந்தையிடம் கொடுத்துள்ளார். அதற்கு அவர், இந்த பணத்தில் யாருக்காவது சாப்பாடு வாங்கி கொடுக்கலாம் என கூறியதாக தெரிகிறது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமி, ‘கீழே பணம் கிடந்தால், அதனை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறி, அந்த பணத்துடன் அம்பத்தூர் காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கு, சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் டில்லிபாபுவிடம் அந்த பணத்தை ஒப்படைத்துள்ளார். சிறுமியின் நேர்மையான குணத்தை பாராட்டி, காவல் ஆய்வாளர், ‘டெடி பியர்’ பொம்மையை சிறுமிக்கு பரிசளித்தார்.

The post சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளை காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்த சிறுமி appeared first on Dinakaran.

Read Entire Article