சாலையில் கிடந்த பையில் ரூ. 2 லட்சம்: போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த கட்டிட தொழிலாளிக்கு பாராட்டு

5 hours ago 1

சென்னை நங்கநல்லூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி உமாபாரதி. இவர் நேற்று அப்பகுதியில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பை கிடந்தது. அந்த பையை உமாபாரதி எடுத்து பார்த்தார். அதில் ரூ. 2 லட்சம் பணம் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உமாபாரதி பணப்பையுடன் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.

பணப்பையை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, பணப்பையில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போலீசார், பணத்தை உரியவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

மேலும், சாலையில் பையில் கிடந்த ரூ. 2 லட்சம் பணத்தை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த கட்டிட தொழிலாளி உமாபாரதிக்கு போலீசார் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.  

Read Entire Article