சாலையின் குறுக்கே 30 டன் சுமையுடன் கனரக வாகனம் கவிழ்ந்து விபத்து.. வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல்.

3 months ago 22
சென்னை குன்றத்தூர் அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பாரம் தாங்காமல் சாலையின் குறுக்கே 30 டன் சுமையுடன் கனரக வாகனம் கவிழ்ந்தது. இதனால் பல கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் உட்பட மூன்று பேரும் லேசான சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். குன்றத்தூர் போலீசார் சாலையின் குறுக்கே இருந்த கனரக வாகனத்தை  ராட்சத கிரேன் கொண்டு வந்து அப்புறப்படுத்தினர் 
Read Entire Article