தக்கலை, பிப்.13 : தகவல் அறியும் பயனாளிகள் சங்கம் மற்றும் ஊழல் எதிர்ப்பு சங்க செயற்குழு கூட்டம் தக்கலையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். அன்ன புஷ்பம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மல்யுத்த போட்டியில் மாநில அளவில் பரிசு பெற்ற குமரி வீரர் றுாபன்ஸ்க்கு பயிற்சி அளித்த சங்க அமைப்பு செயலாளர் பிரைட்டை பாராட்டி கவுரவித்தனர். மேலும் தேசிய நெடுஞ்சாலை, மாநில சாலைகள், ஊரக சாலைகளை ஆக்கிரமித்து சுவர்கள் கட்டப்பட்டிருப்பதால் சாலை குறுகலாகி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்க செயலாளர் ஹென்றி, பொருளாளர் நாகப்பன், நிர்வாகிகள் ராஜமணி, ஜாண்றோஸ், செல்வராஜ், ஆலிஸ் ஹெப்சிபாய், சாந்த குமார், பெனடிக்ட் தர்மராய், கிளிட்டஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post சாலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டுமானங்களை அகற்ற வேண்டும் தகவல் அறியும் பயனாளிகள் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.