சாலை விபத்து: உத்தர பிரதேசத்தில் மாணவர்கள் 2 பேர் பலி

1 week ago 2

லக்னோ,

உத்தர பிரதேசம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் உள்ள டிகுனியா நகரத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தனர். சிறுவர்கள் தனது பைக்கிள் நேற்று காலை டிகுனியா-பெக்ராயன் செல்லும் சாலையில் சென்றுகொண்டிருந்தனர். காலை நேரம் என்பதால் அடர் மூடு பனியால் எதிர்பாராத விதமாக எதிரில் வந்த லாரி மோதி இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் விபத்தில் உயிரிழந்தவர்கள் சிவான்ஷ் ஜெயின் (17) மற்றும் ஆர்யன் சிங் (16) எனவும் அவர்கள் கல்லூரி மாணவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தை ஏற்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article