பெரம்பூர்: புளியந்தோப்பு பட்டாளம் போகி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சதீஷ் (16), பத்தாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் சதீஷ் தனது சைக்கிளில் பட்டாளம் ஸ்டாரன்ஸ் ரோடு சந்திப்பு வழியாக செல்லும்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று சிறுவன் மீது மோதியது. பலத்த காயமடைந்த சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் புளியந்தோப்பு 3வது தெருவை சேர்ந்த சபீர் (43) என்பவர் நேற்று முன்தினம் தனது காரில் மாதவரத்தில் இருந்து தனது வீட்டிற்கு செல்லும்போது விபத்து நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து, சபீரை கைது செய்து புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சிறுவன் சதீஷின் தந்தை கடந்த 8 வருடத்திற்கு முன்பு மரணம் அடைந்துள்ளார். தற்போது சிறுவன் தனது தாயுடன் வசித்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
The post சாலை விபத்தில் மாணவன் பலி appeared first on Dinakaran.