சாலை விதியை மீறியவர்களுக்கு எச்சரிக்கை

4 months ago 12

 

பரமக்குடி,ஜன.6: பரமக்குடி உட்கோட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சார் ஆட்சியர் அபிலேஷா கெளர் தொடர்ந்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று, மதுரை ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை சோமநாதபுரம் பகுதியில் விதிமுறைகளை மீறி செல்லும் நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி சாலை பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தார்.

அப்போது, தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் சென்ற 21 நபர்களுக்கு ரூ.1000 வீதம் ரூ. 21 ஆயிரமும், நம்பர் பிளேட் குறைபாடுள்ள 2 வாகனங்களுக்கு ரூ.500 வீதம் மொத்தம் ரூ.22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து சாலை விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனத்தை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

The post சாலை விதியை மீறியவர்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article