சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்த வாலிபரை தொட்டில் கட்டி தூக்கி சென்ற கிராம மக்கள்

2 hours ago 3

உடுமலை: ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்தில் குளிப்பட்டி, குருமலை, மாவடப்பு உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாலை வசதி கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குருமலை கிராமத்தைச் சார்ந்த சரவணன் (30) என்பவர் திருமூர்த்தி நகரில் மளிகை பொருட்களை வாங்கி கொண்டு வீடு திரும்பினார். மலைப்பகுதி வழியாக சென்றபோது எதிர்பாராதவிதமாக அவரை பாம்பு கடித்தது.

உடனடியாக, மலை கிராம மக்கள் அவரை மருத்துவமனைக்கு தொட்டில் கட்டி உடுமலை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். சாலை வசதி இல்லாததால் மலை கிராமத்துக்கு அவசர மருத்துவ தேவைகளுக்கு எந்த வாகனங்களும் செல்ல முடியாததால் தொடர்ந்து தொட்டில் கட்டி தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் பல்வேறு சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே, உடனடியாக போர்க்கால அடிப்படையில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் அரசு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்த வாலிபரை தொட்டில் கட்டி தூக்கி சென்ற கிராம மக்கள் appeared first on Dinakaran.

Read Entire Article