சாலை, பாலங்களை சரியாக அமைக்காத ஒப்பந்ததாரர்களை கைது செய்ய சட்டம்: பாஜக வலியுறுத்தல்

2 hours ago 3

சென்னை: தமிழகத்தில் சாலைகள், மேம்பாலங்களை சரியாக அமைக்காவிட்டால், ஒப்பந்ததாரர்கள், அரசு அதிகாரிகளை கைது செய்யும் சட்டத்தை இயற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, "சாலைகளை தவறாக குண்டும் குழியுமாக அமைப்பது 'பிணையில்லாத குற்றமாக' மாற்றப்பட வேண்டும். சாலைகளில் எதாவது விபத்து ஏற்பட்டால், அந்தச் சாலையை அமைத்த ஒப்பந்ததாரர், பொறியாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்" என கூறியிருக்கிறார்.

Read Entire Article