சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

2 weeks ago 1

 

திருப்பூர், ஜன.24: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி என்எஸ்எஸ் அலகு – 2 மற்றும் போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து புஷ்பா தியேட்டர் அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் அலகு – 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் கலந்து கொண்டு பேசுகையில், அனைவரும் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும், தலைக்கவசம் நமது உயிர் கவசம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.சாலையில் அதிவேகமாக பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.இளைஞர்கள் சாலையில் சாகசங்களில் ஈடுபடக்கூடாது.

மேலும் குழந்தைகளை ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்க பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது. அப்படி அனுமதித்தால் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என்று கூறினார். பிறகு மாணவ செயலர்கள் மதுகார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, செர்லின், நவீன்குமார், பிரவீன், தாமோதரன், ஹேமந்த் ராகுல் ஆகியோர் தலைமையில் மாணவ மாணவிகள் சாலையில் தலைக்கவசம் அணியாமல் சென்று விபத்து ஏற்பட்டது போல தத்ரூபமாக நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்விற்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

The post சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Read Entire Article