சார் பதிவாளர்கள் நீதிபதிகளை விட உயர்ந்தவர்களா? ஐகோர்ட் கிளை கேள்வி

4 months ago 30

மதுரை, அக். 1: தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்த பாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், எனது நிலத்தை மூல பத்திரங்கள் இல்லாமல் பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தும் கடம்பூர் சார்பதிவாளர் மறுக்கிறார் என கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், ‘‘ஏற்கனவே உத்தரவுகள் உள்ள நிலையில் சார்பதிவாளர்கள் ஏன் இவ்வாறு செயல்படுகிறீர்கள்? நீதிபதிகளை விட சார்பதிவாளர்கள் உயர்ந்தவர்களா?’’ என கேள்வி எழுப்பி அவரை ஆஜராக உத்தரவிட்டனர். அதன்படி ஆஜரான சார்பதிவாளர் பார்வதிநாதனுக்கு ₹25,000 அபராதம் விதித்து, இடத்தைபதிவு செய்யவும் உத்தரவிட்டார்.

The post சார் பதிவாளர்கள் நீதிபதிகளை விட உயர்ந்தவர்களா? ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article