சாய் பல்லவி நடித்துள்ள 'தண்டேல்' படத்தின் டிரெய்லர் வெளியானது

1 week ago 2

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவரது நடிப்பில் வெளியாக உள்ள படம் 'தண்டேல்'. இதில், சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். 'கார்த்திகேயா 2' திரைப்படத்தின் மூலம் பிரபலமான சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்கியுள்ளார்.

கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னிவாஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்ரீகாகுளத்தில் உள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.

இந்நிலையில் 'தண்டேல்' திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

'தண்டேல்' படம் பிப்ரவரி 7-ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

#Thandel ante? Owner kaadhu...LEADER ⚓The most awaited #ThandelTrailer out now ❤️▶️ https://t.co/8QT65Kvor5GRAND RELEASE WORLDWIDE ON FEBRUARY 7th #ThandelonFeb7th pic.twitter.com/ZWeo6QaQtx

— Thandel (@ThandelTheMovie) January 28, 2025
Read Entire Article