சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை ஏன் சமூக வலைதளங்களில் பதிவிடவில்லை..? விராட் கோலி பதில்

5 hours ago 3

பெங்களூரு,

அண்மையில் முடிவடைந்த 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியை இந்திய வீரர்கள் பலரும் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆனால் விராட் கோலி இது குறித்து எந்த ஒரு பதிவும் பதிவிடாதது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் இந்திய வீரர்களிலேயே விராட் கோலிக்குத்தான் சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். அப்படி இருந்தும் அவர் இந்திய அணியின் வெற்றியை பதிவிடாதது பலரது மத்தியில் சந்தேகத்தை கிளப்பியது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் நேரடியாகவே இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "சாம்பியன்ஸ் டிராபியை வென்றது பற்றி பதிவிடுவது என்னுடைய இதயத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கப் போவதில்லை. ரசிகர்கள் அனைவருமே நாங்கள் கோப்பையை வென்றோம் என்பதை அறிவார்கள். எனவே அதைப்பற்றி பதிவிடுவது எங்களுக்கு 2 கோப்பைகளைக் கொடுக்க போவதில்லை. நிதர்சனம் என்பது அப்படியேத்தான் இருக்க போகிறது. இப்போதெல்லாம் நான் அதிகமாக எதையும் பதிவிடுவதில்லை.

அதைப் பதிவிடுவதால் சிலருக்கு மகிழ்ச்சி கிடைப்பதில்லை. அது நான் மனப்பூர்வமாக செய்ய முயற்சித்த ஒன்று. அது என்னிடமிருந்து நிறைய சக்தியை எடுத்துக்கொள்கிறது. எனவே அதை பதிவிடாமல் இருக்கும்போது அதே ஆற்றலை என்னால் விளையாட்டிலோ அல்லது சொந்த வாழ்க்கையிலோ பயன்படுத்த முடியும்" என்று அவர் கூறினார்.

Read Entire Article