
மும்பை,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதனையடுத்து இந்திய வீரர்கள் அனைவரும் மார்ச் 22-ம் தேதி தொடங்க உள்ள ஐ.பி.எல். தொடரில் விளையாட உள்ளனர்.
ஐ.பி.எல் தொடர் நிறைவடைந்தவுடன் இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ் தொடரில் விளையாட உள்ளது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது.