லாகூர்: 8 அணிகள் பங்கேற்றுள்ள 9வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் லாகூரில் நாளை மதியம் 2.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் 4வது லீக் போட்டியில் பி பிரிவில் ஆஸ்திரேலியா -இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க் இல்லாத நிலையில் இளம் வேகப்பந்து வீச்சாளர்களை நம்பி உள்ளது. ஸ்மித் கேப்டனாக களம் இறங்குகிறார். பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், மத்தேயு ஷார்ட் அலெக்ஸ் கேரி, லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், பவுலிங்கில் நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா, சீன் அபேட், ஸ்பென்சர் ஜான்சன் வலு சேர்ப்பர்.
மறுபுறம் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஜோரூட், பென் டக்கெட், ஹாரி புரூக், பில்சால்ட், லிவிங்ஸ்டன், பேட்டிங்கில் முதுகெலும்பாக உள்ளனர். பவுலிங்கில் அடில் ரஷித் சுழலில் அசத்துவார். வேகத்தில் ஆர்ச்சர், மார்க்வுட், ஜேமி ஓவர்டன் இடம் பெறக்கூடும். இரு அணிகளும் வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் போராடும். இதற்கு முன் ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் மோதிய 161 போட்டியில் 91ல் ஆஸ்திரேலியாவும், 65ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 2 போட்டி டையில் முடிந்துள்ளது. 3 போட்டி கைவிடப்பட்டுள்ளது.
The post சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து லாகூரில் நாளை மோதல் appeared first on Dinakaran.