சாம்பியன்ஸ் டிராபி: சிறந்த அணியை தேர்வு செய்த ஐ.சி.சி... இந்திய வீரர்கள் ஆதிக்கம்

2 hours ago 1

துபாய்,

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை உச்சி முகர்ந்தது.

இந்நிலையில் இந்த தொடரில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்திய வீரர்களை கொண்டு சிறந்த அணியை உருவாக்கி ஐ.சி.சி. அறிவித்துள்ளது. சாண்ட்னர் தலைமையிலான அந்த அணியில் 6 இந்திய வீரர்கள் (12-வது வீரராக அக்சர் படேல்), 4 நியூசிலாந்து மற்றும் 2 ஆப்கானிஸ்தான் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். 

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகளில் இருந்து ஒரு வீரர் கூட இடம்பெறவில்லை.

ஐ.சி.சி.-தேர்வு செய்த அணி விவரம்:

ரச்சின் ரவீந்திரா, இப்ராகிம் சத்ரன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், கிளென் பிலிப்ஸ், அஸ்மத்துலா ஒமர்சாய், மிட்செல் சாண்டர் (கேப்டன்), முகமது ஷமி, மேட் ஹென்றி, வருண் சக்ரவர்த்தி

12-வது வீரர்:  அக்சர் படேல்

Read Entire Article