முதலிரவு அறைக்கு சென்ற புதுமண தம்பதி... விடிந்ததும் கதவைத் திறந்த உறவினர்களுக்கு அதிர்ச்சி

3 hours ago 2

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த பிரதீப் என்ற இளைஞருக்கும் ஷிவானி என்ற இளம்பெண்ணுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த மார்ச் 7-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, முதலிரவுக்குப்பின் விடிந்ததும் மறுநாள் காலை நெடுநேரமாகியும் புதுமண தம்பதியினர் தங்கள் அறையிலிருந்து வெளியே வராததால் உறவினர்கள் கதவைத் தட்டி அவர்களை எழுப்ப முயற்சித்துள்ளனர். இந்த நிலையில், உள்ளேயிருந்து எவ்வித சத்தமும் வராததைத் தொடர்ந்து சந்தேகமடைந்த உறவினர்கள் கதவைத் உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, மணமகள் கட்டிலில் பேச்சுமூச்சற்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தூக்கில் தொங்கியபடி கிடந்த மணமகனையும், கட்டிலில் பேச்சு மூச்சின்றி கிடந்த மணமகளையும் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் உறவினர்கள் கொண்டு போய் சேர்த்தனர். அங்கே அவர்கள் இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அதன்பின், இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் மணமகள் கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மனைவியை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடுமென சந்தேகிக்கப்படுகிறது. புதுமண தம்பதி திடீரென உயிரிழக்க காரணம் என்ன? என்பதை வழக்குப்பதிவு செய்து அயோத்தி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். புதுமண தம்பதி முதலிரவில் திடீரென உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article