சாம்பியன்ஸ் டிராபி: சிராஜுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டது ஏன்..? இந்திய கேப்டன் விளக்கம்

3 hours ago 2

மும்பை,

8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் பிரதான வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் கழற்றி விடப்பட்டு அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான காரணம் குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், "சிராஜ் அதிகமாக புதிய பந்தை சார்ந்து இருக்கிறார். பழைய பந்தில் பவுலிங் செய்யும் போது அவருடைய தாக்கம் குறைந்து விட்டது. அதேவேளை அர்ஷ்தீப் அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடியதில்லை. ஆனால் அவர் நீண்ட காலமாக வெள்ளை பந்து போட்டிகளில் இருக்கிறார். அவருக்கு அனுபவம் இல்லை என்று சொல்வதில் எனக்கு எந்த திருப்தி இல்லை. அவர் நிறைய டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அழுத்தத்தின் கீழ் சிறப்பாகவே பந்து வீசியுள்ளார். எனவே அவரால் இந்திய அணிக்கு வலு சேர்க்க முடியும்" என்று கூறினார்.

Read Entire Article