
துபாய்,
8 அணிகள் கலந்து கொள்ள உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்தியாவுக்கு உள்ள ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்த தொடருக்கான அணிகளை 8 அணிகளும் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அதில் மாற்றங்களை செய்ய நேற்று வரை ஐ.சி.சி கால அவகாசம் கொடுத்திருந்தது. இதையடுத்து இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் மாற்றங்கள் மேற்கொண்டன.
இந்த நிலையில், 8 அணிகளில் இடம் பெற்றுள்ள வீரர்களின் இறுதிப் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த விவரங்களை இங்கு காண்போம்.
குரூப் ஏ:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்த்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
நியூசிலாந்து: மிட்செல் சாண்ட்னெர் (கேப்டன்), மார்க் சாம்ப்மென், கேன் வில்லியம்சன், வில் யங், டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, மைக்கேல் பிரேஸ்வெல், க்ளென் பிலிப்ஸ், நாதன் ஸ்மித், வில்லியம் ஓ ரூர்க், லாக்கி பெர்குசன், பென் சீயர்ஸ், மேட் ஹென்றி.
பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர், கேப்டன்), பாபர் அசாம், பக்கார் ஜமான், தையப் தாஹிர், குஷ்தில் ஷா, உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), கம்ரான் குலாம், சவூத் ஷகீல், சல்மான் ஆஹா, பஹீம் அஷ்ரப், அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவூப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஷாகின் அப்ரிடி.
வங்காளதேசம்: நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), மெஹதி ஹசன் மிராஸ் (துணை கேப்டன்), சவுமியா சர்கா, தவ்ஹித் ஹ்ரிடோய், தன்சித் ஹசன், மஹ்மதுல்லா, முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), ஜேக்கர் அலி (விக்கெட் கீப்பர்), பர்வேஸ் ஹொசைன் எமோன் (விக்கெட் கீப்பர்), ரிஷாத் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது, நஹித் ராணா, நசும் அகமது, தன்சிம் ஹசன் சகிப்.
குரூப் பி:-
ஆஸ்திரேலியா: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஜேக் பிரேசர்-மெக்குர்க், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஸ்சாக்னே, மேத்யூ ஷார்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), ஆரோன் ஹார்டி, க்ளென் மேஸ்வெல், சீன் அப்போட், பென் துவார்ஷியஸ், நாதன் எல்லீஸ், ஸ்பென்சர் ஜான்சன், தன்வீர் சங்கா, ஆடம் ஜாம்பா.
இங்கிலாந்து: ஜாஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், பென் டக்கட், ஜோ ரூட், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டன், பிரைடன் கார்ஸ், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், சகிப் மஹ்மூத், மார்க் வுட்.
தென் ஆப்பிரிக்கா: தெம்பா பவுமா (கேப்டன்), எய்டன் மார்க்ரம், டோனி டி ஜோர்ஜி, ராஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், ரியான் ரிக்கெல்டன் (விக்கெட் கீப்பர்), ஹென்றிச் க்ளாசென் (விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சென், வியான் முல்டர், கார்பின் போஷ், காகிசோ ரபாடா, கேசவ் மஹாராஜ், தப்ரைஸ் ஷம்சி, லுங்கி என்கிடி.
ஆப்கானிஸ்தான்: ஹஸ்மத்துல்லா ஷாகிதி (கேப்டன்), ரஹ்மத் ஷா, செடிகுல்லா அடல், இப்ராகிம் ஜட்ரான், ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), குல்பைடின் நைப், அஸ்மத்துல்லா ஓமர்சாய், முகமது நபி, ரஷித் கான், நங்கெயிலியா கரோட்டி, பசல்ஹக் பரூக்கி, பரீத் அகமது மாலிக், நூர் அகமது, நவீத் ஜட்ரான்.