சாம்பியன்ஸ் டிராபி; 2-வது வெற்றி யாருக்கு?- ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் நாளை மோதல்

3 hours ago 2

ராவல்பிண்டி,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்நிலையில், இந்த தொடரில் ராவல்பிண்டியில் நாளை நடைபெறும் 7வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானையும், ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தையும் வீழ்த்தி உள்ளன. இதனால் நாளைய ஆட்டத்தில் 2வது வெற்றியை பதிவு செய்வது எந்த அணி என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இரு அணிகளும் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தி கொள்ள கடுமையாக போராடும். இரு அணிகளிலும் திறமையான வீரர்கள் இருப்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

Read Entire Article