புதுடெல்லி: இந்திய நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தில் இருந்து மீளாததால், சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்ஷித் ராணா இடம் பிடித்துள்ளார். அதேபோல் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக தமிழ்நாட்டு வீரர் வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய அணியில் மட்டுமல்லாது பிற நாடுகளின் அணிகளிலும் மாற்றங்கள் செய்யபட்டுள்ளன. அதுபற்றிய விவரம்:
* இந்திய அணியில் தொடர்ந்து இடம் பெற்று வந்த முகமது சிராஜ், ஆஸி தொடருக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஓய்வளிக்கப்பட்டது. இப்போது பும்ரா இல்லாத நிலையில் சிராஜ் களம் காணுவார் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர், சாம்பியன்ஸ் கோப்பை தொடர் என 2லும் வேகப் பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா இடம் பிடித்துள்ளார்.
* ஆஸி ஆல் ரவுண்டர் மிட்செல் ஸ்டார்க் தனிப்பட்ட காரணங்களுக்கான சாம்பியன்ஸ் கோப்பைக்கான அணியில் இருந்து விலகியுள்ளார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ஸ்டார்க் ஏற்கனவே விலகி உள்ளார்.
* ஆஸி அணியில் இருந்து கேப்டன் பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹசில்வுட், மிட்செல் மார்ஷ் என நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடவில்லை. கம்மின்ஸ் இல்லாததால் ஸ்டீவன் ஸ்மித் ஒருநாள் அணியின் கேப்டனாக தொடருவார்.
* ஆப்கானிஸ்தான் அணியின் சுழல் பந்து வீச்சாளர் அல்லா கசன்ஃபர் (18) காயம் காரணமாக போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். அவர் 4 மாதங்கள் தொடர் ஓய்வில் இருக்க வேண்டும் என்ற மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். எனவே, அவர் சாம்பியன்ஸ் கோப்பையில் மட்டுமின்றி, அடுத்த மாதம் தொடங்க உள்ள ஐபிஎல் தொடரிலும் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி அவரை 4.8 கோடிக்கு ஏலத்தில்
* ஆப்கானிஸ்தான் அணியில் முஜிப் வூர் ரகுமான் இல்லாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் நடந்த ‘எஸ்ஏ டி20’ தொடரில் விளையாடியும் முஜிப் தற்போது ஆப்கான் அணியில் இடம் பெறவில்லை. இந்நிலையில் கசன்ஃபரும் விலக்கப்பட்டுள்ளது அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post சாம்பியன்ஸ் கோப்பை போட்டி; பும்ரா இல்லாமல் களம் காணும் இந்தியா: காயத்தில் மீளாததால் ரசிகர்கள் ஏமாற்றம் appeared first on Dinakaran.