சென்னை: சாம்சங் துணை நிறுவனத்துக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் தவிர மற்ற போரட்டத்தை நவ.30ல் நடத்த ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. சாம்சங்கில் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கக்கோரி நடந்த போராட்டத்தில் ஈடுபட்டதற்காக எஸ்.எச். எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 91 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதிக்க கோரி, காஞ்சி மாவட்ட சிஐடியு செயலாளர் முத்துக்குமார் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவில்; சாம்சங் துணை நிறுவனமான எஸ்.எச் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைச்சேர்ந்த 91 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
91 ஊழியர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்யக் கோரி, உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது; உண்ணாவிரத போராட்டங்களுக்கு அனுமதி அளித்து ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புகள் உள்ளது என தொழிற்சங்கத்தினர் தரப்பு வாதிட்டது. காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் முன்பு வேறு வகையான போராட்டம் நடத்த ஒப்புதல் அளித்து மனுதாரர் தெரிவித்துள்ளார் என அரசு தரப்பு தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி உண்ணாவிரத போராட்டம் தவிர மற்ற போராட்டத்தை நடத்தலாம் என அனுமதி வழங்கியது.
The post சாம்சங் துணை நிறுவனத்துக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் தவிர மற்ற போரட்டத்தை நவ.30ல் நடத்த ஐகோர்ட் அனுமதி appeared first on Dinakaran.