சானியாவின் சகோதரி நடத்திய கண்காட்சியில் துப்பாக்கிச் சூடு: ஐதராபாத்தில் பரபரப்பு

1 day ago 4


ஐதராபாத்: ஐதராபாத் மன்னர் அரண்மனையில் சானியா மிர்சாவின் சகோதரி ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியில் துப்பாக்கிச் சூடு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ெதலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரத்தில் இருக்கும் மன்னர் அரண்மனையில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சகோதரி அனம் மிர்சா என்பவர் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். நூற்றுக்கணக்கான மக்கள் கண்காட்சிக்கு வந்து சென்று கொண்டிருந்த நிலையில், அந்த கண்காட்சி வளாகத்தில் கடை வைத்திருந்த வாசனை திரவியக் கடையின் உரிமையாளருக்கும், பொம்மைக் கடையின் உரிமையாளருக்கும் இடையே சிறிய தகராறு ஏற்பட்டது; பின்னர் அவர்களுக்குள் சமாதானமாகிக் கொண்டனர்.

இதற்கிடையில் அங்கிருந்த ஹசாபுதீன் என்பவர் தனது உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி இரண்டு முறை சுட்டார். அதனால் கண்காட்சியில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். தகவலறிந்த போலீசார் பொது இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஹசாபுதீன் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த துப்பாக்கி மற்றும் தோட்டக்களை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மன்னர் அரண்மையில் துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post சானியாவின் சகோதரி நடத்திய கண்காட்சியில் துப்பாக்கிச் சூடு: ஐதராபாத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article