சாத்தூர், டிச.11: சாத்தூர் அருகே வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. சாத்தூர் அருகே மேட்டமலை வடக்கு தெருவில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்வதற்கு வசதியாக வாய்க்கால் உள்ளது. ஆனால் வாய்க்காலில் சேறும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய போதியளவு தூய்மைப் பணியாளர்கள் இல்லை. எனவே கழிவு நீர் குடியிருப்பு அருகில் உள்ள வேலி முட்செடிகள் உள்ள புதர்களில் தேங்கியுள்ளது.
இந்த கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் விரைந்து தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். மக்கள் கூறுகையில், வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளதால் கழிவுநீர் செல்லாமல் தேங்கியுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் அபாயமும் நிலவுகிறது. எனவே கால்வாயை சரி செய்து கழிவுநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
The post சாத்தூர் அருகே குடியிருப்பில் தேங்கி நிற்கும் கழிவுநீர்: தொற்றுநோய் பரவும் அபாயம் appeared first on Dinakaran.