சாத்தான்குளம் பகுதி மக்களின் கோரிக்கைகள் தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும்

7 hours ago 2

சாத்தான்குளம், ஏப்.28:சாத்தான்குளம் பகுதி மக்களின் கோரிக்கைகளை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கூடுதல் வகுப்பறை அடிக்கல் நாட்டுவிழாவில் கனிமொழி எம்பி தெரிவித்தார்.

சாத்தான்குளம் அருகேயுள்ள பொத்தக்காலன்விளை புனித வளனார் பெண்கள் தொடக்கப்பள்ளியில் எம்பி மேம்பாட்டு நிதி ரூ.36 லட்சம் மதிப்பில் இரு வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார். கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா, திருச்செந்தூர் ஆர்டிஓ சுகுமார், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாத்தான்குளம் ஒன்றிய ஆணையாளர் ராஜா ஆறுமுகநயினார் வரவேற்றார். பொத்தகாலன்விளை திருக்கல்யாணமாதா திருத்தல அதிபர் ஜஸ்டின் ஆரம்ப ஜெபம் செய்தார்.

இதில் கனிமொழி எம்பி பங்கேற்று, புதிய வகுப்பறை கட்ட அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்கள், விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் கனிமொழி எம்பி பேசுகையில், இங்குள்ள மக்களின் கோரிக்கையை ஏற்று இரு வகுப்பறைகள் கட்ட எம்பி நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்துள்ளேன். அந்தக் கட்டிடம் நல்லமுறையில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வழங்கப்படும். அதேபோல் இங்குள்ள மக்கள் கொடுத்துள்ள கோரிக்கை மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

விழாவில், சாத்தான்குளம் தாசில்தார் இசக்கி முருகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுடலை, ஒன்றிய திமுக செயலாளர்கள் ஜோசப், பாலமுருகன், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உதவியாளர் கிருபா, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் பார்த்தசாரதி, சக்திவேல் முருகன், சாஸ்தாவிநல்லூர் விவசாய நல சங்கத் தலைவர் காமராஜ், சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க தலைவர் லூர்துமணி, வட்டார மனிதநேய நல்லிணக்க பெருமறை செயலாளர் மகா பால்துரை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியை பெரியநாயகி நன்றி கூறினார்.

சடையனேரி கால்வாயை நிரந்தரமாக்க விவசாயிகள் வலியுறுத்தல்
இந்நிலையில் பொத்தகாலன்விளை வந்த கனிமொழி எம்பியிடம் சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க தலைவர் லூர்து மணி தலைமையில் விவசாயிகள் மனு அளித்தனர். அந்த மனுவில், சாத்தான்குளம் பகுதியில் பிரதான குளமான புத்தன்தருவை குளத்திற்கு சடையனேரி கால்வாயில் இருந்து ஆண்டுதோறும் உபரிநீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் இப்பகுதி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் கால்வாயில் 500 கனஅடி நீர் வரும் வகையிலே உள்ளது. தற்போது கால்வாய்த் தூர்ந்து போய் உள்ளதால் குறைவான அளவே தண்ணீர் வருகிறது. சடையனேரி கால்வாயை நிரந்தரமாக வேண்டும். தூர்ந்து போன கால்வாயை விரிவாக்கம் செய்து ஆயிரம் கன அடி தண்ணீர் வரும் வகையில் விரிவாக்கம் செய்ய வேண்டும். என கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்ற கனிமொழி எம்பி, நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். வாலிபர் கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் குண்டர் சட்டத்தில் கைது தூத்துக்குடி,ஏப்.28:கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக இளைஞரை காரால் மோதியும், அரிவாளால் தாக்கியும் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்த கணேசமூர்த்தி மகன் சண்முகராஜ் (30), வெள்ளபாண்டி மகன் மகாராஜன் (34) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை எஸ்பி ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி கலெக்டர் இளம்பகவத் குண்டர் தடுப்பு சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நகலை போலீசார் பாளை மத்திய சிறையில் வழங்கினர்.

The post சாத்தான்குளம் பகுதி மக்களின் கோரிக்கைகள் தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும் appeared first on Dinakaran.

Read Entire Article