தூத்துக்குடி, ஜன. 23: சாத்தான்குளம், ஆழ்வார்திருநகரி வட்டாரங்களில் கூட்டுறவு ரேஷன் கடைகளில் இணை பதிவாளர் தலைமையில் பறக்கும் படையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தலைமையில் துணை பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) மற்றும் 5 துணை பதிவாளர்கள், 20 கூட்டுறவு சார் பதிவாளர்கள் மற்றும் 6 முதுநிலை ஆய்வாளர்கள் உள்பட 32 கூட்டுறவு துறை அலுவலர்கள் அடங்கிய சிறப்பு பறக்கும் படை ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் (21ம் தேதி) சாத்தான்குளம் மற்றும் ஆழ்வார்திருநகரி வட்டாரங்களில் உள்ள 65 கூட்டுறவு துறை நியாயவிலை கடைகளில் திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டது. இதில் ரேஷன் கடைகளில் இருப்பு குறைவு மற்றும் இருப்பு அதிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர்களுக்கு இருப்பு குறைவிற்காக ரூ.7500 அபராதமாக விதிக்கப்பட்டது. இதேபோல் கூடுதலாக கண்டறியப்பட்ட பொருட்களுக்காக ரூ.1150 அபராதம் விதிக்கப்பட்டது.
The post சாத்தான்குளம், ஆழ்வார்திருநகரி ரேஷன் கடைகளில் பறக்கும்படை ஆய்வு appeared first on Dinakaran.